NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சியில் உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி ஜனவரியில் முற்றுகை போராட்டம் – தமிழர் தேசம் கட்சியினர் அறிவிப்பு

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி ஜனவரியில் முற்றுகை போராட்டம் – தமிழர் தேசம் கட்சியினர் அறிவிப்பு

 



திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தரையர் மக்களின் புனித தளமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபத்தின் அருகிலேயே புனித தன்மையை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிடக்கோரியும், மேலும் தமிழக அரசு அறிவித்தபடி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டப வளாகத்தில் நூலகத்தினை விரைந்து திறந்திடக் கோரி தமிழர் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜங்ஷன் பகுதி செயலாளர் தனபால் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் வள்ளல் மணி, மாவட்ட இணை செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் அலகரை பரமசிவம், மாவட்ட செயலாளர் மண்ணை சதீஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் நூலகத்தை விரைந்து திறந்திடக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Post a Comment

0 Comments